search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஓம் நமச்சிவாய.. குடிபோதையில் பெண் மீது கார் ஏற்றி கொன்ற இளைஞர்.. பதறவைக்கும் வீடியோ
    X

    'ஓம் நமச்சிவாய'.. குடிபோதையில் பெண் மீது கார் ஏற்றி கொன்ற இளைஞர்.. பதறவைக்கும் வீடியோ

    • காரில் இருந்து வெளியே இறங்கி வந்த சௌராசியா "மாமா", "இன்னொரு ரவுண்ட்",மற்றும் "ஓம் நம சிவாய" என்று உச்சக் குரலில் கத்தத் தொடங்கினார்.
    • பொதுமக்களிடம் இருந்து சௌராசியாவை மீட்டு போலீசார் அழைத்துச்சென்றனர்.

    குஜராத் மாநிலம் வதோதராவில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டார். மூன்று பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    எம்எஸ் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு சட்டம் பயிலும் மாணவர் ரக்ஷித் சௌராசியா. இவர் நேற்று இரவு வதோதராவில் அம்ரபாலி வளாகம் அருகே வேகமாக காரில் வந்துகொண்டிருந்தபோது அவ்வழியே பெண் ஒருவர் ஓட்டிவந்த ஸ்கூட்டரின்மேல் இடித்துள்ளார்.

    மேலும் 2 இருசக்கர வாகனங்கள் வழிப்போக்கர்கள் மீதும் கார் இடித்துள்ளது. இதில் 1 குழந்தை உட்பட 4 பேர் வரை காயமடைந்தனர். காரில் முன்பகுதி சேதமடைந்து உள்ளே ஏர்பேக் திறக்கும் அளவுக்கு மிகவும் பலமாக ஸ்கூட்டரின் மேல் இடித்துள்ளது. இதனால் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சேதமடைந்த காரில் இருந்து வெளியே இறங்கி வந்த சௌராசியா "மாமா", "இன்னொரு ரவுண்ட்", மற்றும் "ஓம் நம சிவாய" என்று உச்சக் குரலில் கத்தத் தொடங்கினார். பின்னர் தப்பியோட முயன்ற அவரை அங்கிருந்த மக்கள் பிடித்து அடித்துள்ளனர். சௌராசியா குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    காயடமைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பொதுமக்களிடம் இருந்து சௌராசியாவை மீட்டு கைது செய்து அழைத்துச்சென்றனர்.

    சௌராசியா குடிபோதையில் இருந்தானா என்பதை அறிய ரத்த பரிசோதனை நடத்தப்படும் என்றும் அவருடன் காரில் வந்த மற்றோரு இளைஞன் தப்பியோடிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். குஜராத்தில் மது விலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×