என் மலர்
இந்தியா
X
ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க கட்டணம் உயருகிறது- ரிசர்வ் வங்கி ஆலோசனை
Byமாலை மலர்5 Feb 2025 11:14 AM IST
- கணக்கு உள்ள வங்கி ஏ.டி.எம். மையங்களில் 5 முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம்.
- இதர வங்கி ஏ.டி.எம்.களில் 3 முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம்.
வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்துவது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. தற்போது வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு உள்ள வங்கி ஏ.டி.எம். மையங்களில் 5 முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம்.
அதேபோல் இதர வங்கி ஏ.டி.எம்.களில் 3 முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதன்பிறகு ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் ரூ.21 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த கட்டணத்தை ரூ.22 ஆக அதிகரிக்க தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை அமல்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி தற்போது ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story
×
X