என் மலர்
இந்தியா
ஆசியாவில் முதலிடம்- OG டிராபிக் பாத்திருக்கியா.. பெங்களூருனா சும்மாவா?
- பணி நிமித்தமாகவும், சொந்த பணிகளுக்காகவும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.
- நகரில் 10 கி.மீ., தூரத்தை கடக்க 28 நிமிடங்கள் 10 நொடிகள் ஆவது தெரியவந்துள்ளது.
ஆசியாவில் போக்குவரத்தில் மோசமான நகரம் என்ற பெயரை கர்நாடக மாநிலத்தின் தலைவரம் பெங்களூரு பெற்றுள்ளது. இங்கு 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சராசரியாக 28 நிமிடங்கள் 10 நொடிகள் ஆவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கர்நாடகா தலைநகரான பெங்களூருவில் ஏராளமான ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. இதனால், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து பணிபுரிகின்றனர். பணி நிமித்தமாகவும், சொந்த பணிகளுக்காகவும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். இதனால், இங்கு போக்குவரத்து நெரிசல் என்பது சர்வ சாதாரணம்.
இந்நிலையில், TomTom Traffic Index என்ற நிறுவனம் 55 நாடுகளில் 387 நகரங்களில் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு நடத்தியது. பயண நேரம், எரிபொருள் செலவு, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட தகவல்களை வைத்து இந்த ஆய்வு நடைபெற்றது.
இதில், ஆசியாவில் போக்குவரத்து நெரிசலில் மோசமான நகராக பெங்களூரு தேர்வாகி உள்ளது. இந்நகரில் 10 கி.மீ., தூரத்தை கடக்க 28 நிமிடங்கள் 10 நொடிகள் ஆவது தெரியவந்துள்ளது.
2வது இடத்தில் மகாஷ்டிராவின் புனே- 27 நிமிடங்கள், 50 நொடிகள், 3வது இடத்தில் பிலிப்பைன்ஸின் மணிலா- 27 நிமிடங்கள், 20 நொடிகள், 4வது இடத்தில் தைவானின் தைசங்- 26 நிமிடங்கள், 50 நொடிகள், 5வது இடத்தில் ஜப்பானின் சபோரா - 26 நிமிடங்கள், 50 நொடிகள் ஆவது ஆய்வில் தெரியவந்துள்ளது.