என் மலர்
இந்தியா
மகாராஷ்டிரா முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்
- புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி நீடித்து வந்தது.
- தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
மாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் இடையிலான முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு விவகாரத்தால் புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி நீடித்து வந்தது.
பாஜக பேச்சுவார்த்தைக்குப் பிறகு மும்பையில் நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்திர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.