என் மலர்
இந்தியா
காஷ்மீரில் இருந்து வந்த பயணிகள் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பாதியிலேயே நிறுத்தம்
- ரயில் மதாத் செயலி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது
- சமீப காலமாக காஸ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்து வருவதால் இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஜம்மு காஷிரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நோக்கி இன்று அதிகாலை வந்தொண்டிருந்த ஜம்மு- ஜோத்புர் பயணிகள் விரைவு ரெயிலுக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாருக்கு பயணிகள் குறைதீர் செயலியான ரயில் மதாத் செயலி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூரில் உள்ள காசு பேகு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள் ரெயிலை சோதனையிட்ட நிலையில் விஷயம் அறிந்து பயணிகள் அலறியடித்து ரெயிலை விட்டு வெளியேறினர். ஆனால் சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்காததால் அது போலியான மிரட்டல் என்று பின்னர் தெரியவந்தது. இந்நிலையில் செயலியில் மிரட்டல் வந்த செல் நம்பரைக் கொண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். சமீப காலமாக காஸ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்து வருவதால் இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.