என் மலர்
இந்தியா

ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி உள்பட 4 பேர் கைது- சி.பி.ஐ. நடவடிக்கை
- அலுவலகங்களில் சோதனை நடத்தி ரூ.1.18 கோடி பணம் பறிமுதல் செய்து உள்ளனர்.
- தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகள் என 12 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளராக இருப்பவர் ராம்பிரித் பஸ்வான். இவர் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக காண்டிராக்டை முடித்து கொடுப்பதற்காக ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் லஞ்சப் பணம் கைமாற்றுவது தொடர்பாக சி.பி.ஐ. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்தில் சோதனை நடத்தி, லஞ்சப் பணம் கைமாறிய போதே, ராம்பிரித் பஸ்வான் மற்றும் தனியார் நிறுவன மேலாளரை கையும் களவுமாக பிடித்தனர்.
இந்த லஞ்ச வழக்கில் நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த மேலும் 6 உயர் அதிகாரிகளும், தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகள் என 12 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இதையடுத்து ராம்பிரித் பஸ்வான், தனியார் நிறுவன அதிகாரி உள்பட 4 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இவர்களது காண்டிராக்ட் சம்பந்தப்பட்ட இடங்கள், அலுவலகங்களில் சோதனை நடத்தி ரூ.1.18 கோடி பணம் பறிமுதல் செய்து உள்ளனர்.