என் மலர்
இந்தியா

மேகதாது விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?- மத்திய அமைச்சரிடம் கேட்டதாக டி.கே. சிவக்குமார் தகவல்

- காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது.
- தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்ப தெரிவித்து வருகிறது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் ஒப்புதல் வழங்காமல் உள்ளது.
காவிரி நதிநீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. அதாவது ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தான் இந்த புதிய அணைகட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்காக ரூ.9 ஆயிரம் கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்துள்ளது.
மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு மத்திய அரசும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்காமல் இருந்து வந்தாலும், தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி அணைகட்டும் திட்டத்திற்கான முன்னேற்பு பணிகளில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் வனப்பகுதி நிலம் அழிக்கப்படுவதை காரணம் காட்டி சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்காமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநில துணை முதல்வரும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் மற்றும் வி. சோமன்னா ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று கேட்டதாக டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-
மேகதாது அணை விவகாரத்தில் உங்களுடைய நிலைப்பாடு என்ன? என மத்திய அரசிடம் கேட்டேன். நாம் வலியுறுத்தலாம் அல்லது அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் அல்லது அனுமதிக்க முடியாது எனக் கூட சொல்லாம். ஆனால், அவர்களுடைய நிலைப்பாட்டை அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும்.
தாமதங்களை நாங்கள் விரும்பாததால், மேகதாது திட்டத்தை நாங்கள் முன்வைத்தோம். மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து தெளிவான அறிக்கையை மத்திய அமைச்சரிடம் கேட்டோம்.
இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.