search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடிய குழந்தைகள்
    X

    பாம்பை வைத்து 'ஸ்கிப்பிங்' விளையாடிய குழந்தைகள்

    • குழந்தைகள் சிறிதும் பயமின்றி சிரித்து பேசிக்கொண்டு ஸ்கிப்பிங் விளையாடுகின்றனர்.
    • வைரலான வீடியோவை பார்த்த பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர்.

    பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் பயங்கரமான பாம்பை கயிறு போல வைத்துக்கொண்டு குழந்தைகள் ஸ்கிப்பிங் விளையாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், 5 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கையில் கயிறை வைத்துக்கொண்டு கயிறு தாண்டுதல், ஸ்கிப்பிங் விளையாடுவது போன்று காட்சி உள்ளது. ஆனால் அவர்கள் அருகே காட்சி செல்லும் போது தான் அவர்கள் கயிறு போல பாம்பை வைத்துக்கொண்டு ஸ்கிப்பிங் விளையாடுவது தெரிகிறது.

    அந்த குழந்தைகள் சிறிதும் பயமின்றி சிரித்து பேசிக்கொண்டு ஸ்கிப்பிங் விளையாடுகின்றனர். இதை வீடியோ எடுப்பவர்கள் அவர்கள் கையில் என்ன இருக்கிறது என்று காட்டுமாறு சிரித்து கொண்டே கேட்கிறார். அப்போது அவர்கள் தங்கள் கையில் இருப்பது மலைப்பாம்பு என கூறி அதை காட்டுகின்றனர். வைரலான இந்த வீடியோவை பார்த்த பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர்.

    இந்த வீடியோ ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் லேண்டில் எடுக்கப்பட்டதாகவும் அங்குள்ள பழங்குடியின குழந்தைகள், இறந்த மலைப்பாம்பை வைத்து விளையாடியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இறந்த பாம்புக்கு மரியாதை தராமல் அதை வைத்து விளையாடுவது சங்கடமாக உள்ளது என பயனர் ஒருவர் பதிவிட்டார்.

    Next Story
    ×