search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: இந்திய விருந்தோம்பலை புகழ்ந்த சுற்றுலா பயணி
    X

    VIDEO: இந்திய விருந்தோம்பலை புகழ்ந்த சுற்றுலா பயணி

    • இந்தியாவில் தான் சுற்றுலா சென்ற இடங்கள், சந்தித்த நபர்கள் பற்றியும் பதிவிட்டுள்ளார்.
    • வீடியோ வைரலாகிய நிலையில், நெட்டிசன்கள் பலரும் வீடியோவுக்கு லைக் தெரிவித்துள்ளனர்.

    உலகம் முழுவதும் இருந்து ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு சுற்றுலா வருகின்றனர். அவ்வாறு டெல்லிக்கு வந்த ரஷிய சுற்றுலா பயணி ஒருவர் இந்திய விருந்தோம்பலை புகழ்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ பகிர்ந்து உள்ளார்.

    அதில், இந்தியாவில் தான் சுற்றுலா சென்ற இடங்கள், சந்தித்த நபர்கள் பற்றியும் பதிவிட்டுள்ளார். மேலும் டெல்லியில் ஒரு கோவிலுக்கு சென்று அங்கு எடுத்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அப்போது அங்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த ஒரு குடும்பத்தினர் ரஷியா சுற்றுலா பயணிக்கு தாங்கள் கொண்டு வந்த மதிய உணவை பகிர்ந்து அளித்துள்ளனர்.

    அதில், ரொட்டி, தால், அப்பளம், சப்ஸி உள்ளிட்ட பிரபல மதிய உணவான தாளி உணவை வழங்கி உள்ளனர். அதை ரஷிய சுற்றுலா பயணி ருசித்து சாப்பிட்டுள்ளார். அப்பளத்தை பார்த்ததும் இது என்ன? என்று வியப்புடன் கேட்டதோடு, அதன் சுவை மிகவும் அருமையாக இருக்கிறது என கூறுகிறார்.

    இந்திய குடும்பத்தினர் காட்டிய விருந்தோம்பல் குறித்து மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவுக்கு வாங்க... ஆன்மீகத்தின் உண்மையான அர்த்தத்தை இந்தியா உங்களுக்கு காட்டும் என பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ வைரலாகிய நிலையில், நெட்டிசன்கள் பலரும் வீடியோவுக்கு லைக் தெரிவித்துள்ளனர்.



    Next Story
    ×