search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அசாமில் அமைதி நிலவ காங்கிரஸ் அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி மீட்டெடுத்தார்- அமித் ஷா
    X

    அசாமில் அமைதி நிலவ காங்கிரஸ் அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி மீட்டெடுத்தார்- அமித் ஷா

    • பிரதமர் மோடி உள்கட்டமைப்புகளை உருவாக்கினார். அசாம் மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தினார்.
    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வளர்ச்சி திட்டத்தில் இணைந்துள்ளனர்.

    அசாம் மாநிலத்தில் அமைதி திரும்ப காங்கிரஸ் கட்சி அனுமதிக்கவில்லை. பிரதமர் மோடி அமைதியை மீட்டெடுத்தார். கட்டமைப்புகள் மேம்படுத்தினார் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, அசாமில் புனரமைக்கப்பட்ட லசித் பார்புகான் போலீஸ் அகாடமியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அசாமில் அமைதி நிலவ காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடி அமைதியை மீட்டெடுத்தார். உள்கட்டமைப்புகளை உருவாக்கினார். அசாம் மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தினார்.

    10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் அமைதி நிலவ முக்கிய வளர்ச்சி திட்டத்தில் இணைந்துள்ளனர். நரேந்திர மோடி தலைமையிலான அரசு 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கட்டமைப்பு திட்டங்களை அசாமுக்கு கொடுக்க இருக்கிறது. சமீபத்தில் முடிவடைந்த வணிக மாநாட்டில் கூடுதலாக 5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, அசாமில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்காக காவல்துறை இருந்தது. ஆனால் இப்போது அது மக்களை மையமாகக் கொண்டதாகியுள்ளது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளில் தண்டனை விகிதம் 5 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது விரைவில் தேசிய சராசரியை விட அதிகமாகும்.

    லசித் பார்புகான் போலீஸ் அகாடமி அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டின் முதன்மையானதாக மாறும். இந்த அகடாமிக்கு 1050 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட இருக்கிறது.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×