search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமித் ஷா பேச்சை கண்டித்து கர்நாடக சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
    X

    அமித் ஷா பேச்சை கண்டித்து கர்நாடக சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

    • அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போராட்டம்.
    • கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்தி போராட்டம்

    கடந்த 17 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

    இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

    இதனையடுத்து அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஜெய் பீம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் நேற்று முழுவதும் முடங்கின.

    பின்னர் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமித் ஷா , பா.ஜ.க. ஒருபோதும் அம்பேத்கரை அவமதிக்காது. * அம்பேத்கரின் கொள்கைகளை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கருத்துக்களை திரித்து கூறிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. AI மூலம் எனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாக பாஜக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.

    இதனையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால் பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    இந்நிலையில், எதிர்கட்சியினரின் கடும் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களை ஆகிய இரு அவைகளும் இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இதனிடையே கர்நாடக சட்டமன்றத்தில் அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சை கண்டித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கலந்து கொண்டார்.

    அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டிக்கும் விதமாக அனைத்து உறுப்பினர் இருக்கைகளிலும் அம்பேத்கரின் புகைப்படத்தை வைத்துவிட்டு சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளியேறினர்.

    Next Story
    ×