என் மலர்
இந்தியா

X
டெல்லியில் நாளை காங்கிரஸ் சார்பில் மகளிர் தின விழா: தமிழகத்தில் இருந்து 22 பேர் பங்கேற்பு
By
மாலை மலர்7 March 2025 2:15 PM IST

- மகளிர் காங்கிரசில் சிறப்பாக பணியாற்றி வரும் பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொருவரும் தலா 500-க்கும் மேற்பட்ட பெண்களை உறுப்பினர்களாக சேர்த்தவர்கள் ஆவார்கள்.
அகில இந்திய காங்கிரஸ் சார்பில் நாளை (8-ந்தேதி) டெல்லியில் இந்திரா பவனில் மகளிர் தினவிழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி இந்தியா முழுவதிலும் இருந்து மகளிர் காங்கிரசில் சிறப்பாக பணியாற்றி வரும் பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் விழாவில் அவர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தை சேர்ந்த 22 பெண்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் தலா 500-க்கும் மேற்பட்ட பெண்களை உறுப்பினர்களாக சேர்த்தவர்கள் ஆவார்கள்.
இவர்கள் அனைவரும் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி சையத்ஹசீனா தலைமையில் டெல்லி சென்றுள்ளார்கள். நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் இவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கிறார்கள்.
மகளிர் தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் கார்கே, பிரியங்கா, ராகுல் ஆகியோர் பெண் நிர்வாகிகளை கவுரவிக்கிறார்கள்.
Next Story
×
X