search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்- பஞ்சாப் முதல்வரை சந்தித்து அழைப்பு விடுத்த தமிழக குழு
    X

    தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்- பஞ்சாப் முதல்வரை சந்தித்து அழைப்பு விடுத்த தமிழக குழு

    • தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் சூழல் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து.
    • 20-க்கும் மேற்பட்ட கட்சிகளின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

    மத்திய அரசு பாராளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யும் போது, தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் சூழல் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து வருகிறார்.

    இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வருகிற 22-ந்தேதி தென் மாநிலங்களை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தை சென்னையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    இதையொட்டி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு தி.மு.க. எம்.பிக்கள் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்து வந்து உள்ளனர்.

    இதில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகளின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

    இந்நிலையில், டெல்லியில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் அமைச்சர் ரகுபதி தலைமையிலான தமிழக குழு சந்தித்து அழைப்பு விடுத்துள்ளது.

    அந்த சந்திப்பில், திமுக எம்பி கனிமொழி, எம்.எம். அப்துல்லா உள்ளிட்டோர் இடம் பெற்றன.

    Next Story
    ×