என் மலர்
இந்தியா

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி பேச்சு
- மறைமுக போர்களும் ஆபத்தானவை மற்றும் வன்முறையானவை.
- பயங்கரவாதத்தை எதிர்த்து இந்தியா எப்போதும் வீரத்துடன் போரிட்டு வருகிறது.
புதுடெல்லி:
டெல்லியில் பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
பயங்கரவாதத்தை அடியோடு வேரறுக்கும் வரை ஓய மாட்டோம். அரசியல், சித்தாந்தம் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாக பயங்கரவாதத்திற்கு உதவும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அத்தகைய நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும்.
பயங்கரவாதத்தை எதிர்த்து இந்தியா எப்போதும் வீரத்துடன் போரிட்டு வருகிறது. வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ பயங்கரவாதத்திற்கு அளிக்கும் அனைத்து வகையான ஆதரவுக்கும் எதிராக உலகம் ஒன்றுபட வேண்டும்.
போர் இல்லாவிட்டால் அமைதி நிலவும் என்று சர்வதேச அமைப்புகள் நினைக்கக்கூடாது. மறைமுக போர்களும் ஆபத்தானவை. எந்த நாடாக இருந்தாலும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எவருக்கும் ஆதரவு அளிக்கக்கூடாது
இவ்வாறு மோடி பேசினார்.