search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாலியல் புகார் அளித்த தலித் பெண்.. குடும்பத்தையே கருவறுத்த கொடூரம்
    X

    பாலியல் புகார் அளித்த தலித் பெண்.. குடும்பத்தையே கருவறுத்த கொடூரம்

    • வழக்கை வாபஸ் பெற பெண்ணின் குடும்பம் திட்டடவடமாக மறுத்த நிலையில் அன்றிலிருந்து அந்த குடுமபத்தை சோகம் நாலாபுறப்பும் சூழத் தொடங்கியது.
    • தனது மகனைக் காப்பாற்றுவதற்காக அவர்களின் முன்னிலையில் தனது ஆடைகளை சிறுவனின் தாய் களைந்து நின்ற கொடூரமும் நிகழ்ந்தது.

    மத்திய பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் வசித்து வரும் தலித் சமூகத்தைச் சேர்ந்த 15 வயது இளம்பெண் கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்திருந்தார்.

    அப்பகுதியைச் சேர்ந்த நால்வர் தன்னை அடித்துத் துன்புறுத்தி வன்கொடுமை செய்து, போலீசிடம் சென்றால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் தனது புகாரில் கூறியிருந்தார்.

    இந்த விவகாரம் அந்த சமயத்தில் அரசியல் ரீதியாக பூதாகரமாக வெடித்த நிலையில் வழக்கு மீதான விசாரணை இன்று வரை நடந்து வருகிறது. வழக்கை வாபஸ் பெறும்படி பெண்ணின் குடும்பத்துக்கு உறவினர்கள் மூலமும் ஊர்க்காரர்கள் மூலமும் அழுத்தம் கொடுக்கப்பட்டது வந்தது.

    ஆனால் வழக்கை வாபஸ் பெற பெண்ணின் குடும்பம் திட்டவட்டமாக மறுத்த நிலையில் அன்றிலிருந்து அந்த குடுமபத்தை சோகம் நாலாபுறப்பும் சூழத் தொடங்கியது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பாதிக்கப்பட்ட பெண்ணின் 18 வயது தம்பியை 9 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொன்றது. தனது மகனைக் காப்பாற்றுவதற்காக அவர்களின் முன்னிலையில் தனது ஆடைகளை சிறுவனின் தாய் களைந்து நின்ற கொடூரமும் நிகழ்ந்தது.

    இந்த சம்பவத்தில் 9 பேர் மீதும் சிறுபான்மையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலையை நேரில் பார்த்த சிறுவனின் உறவினரை கடந்த மே 25 ஆம் தேதி சமாதானம் பேசுவதாக அழைத்து வழக்கில் சம்பந்தமுடையவர்கள் கொலை செய்துள்ளனர்.

    இதைதொடரந்து பாதிக்கபட்ட பெண்ணும் உயிரிழந்த உறவினரின் உடலுடன் கடந்த மே 26 ஞாயிறுக்கிழமை வேனில் வரும்போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 6 வருடங்களாக நடந்து வரும் இந்த பிரச்சனையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தொடந்து கொலை செய்யப்பட்டு, அந்த பெண்ணும் உயிரிழந்துள்ளது நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகம் காட்டியதாக ஆளும் பாஜக கட்சியை எதிரிக்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

    Next Story
    ×