என் மலர்
இந்தியா
பெங்களூரு புத்தாண்டு பார்ட்டிகளுக்காக கஞ்சா ஓட்டும் வியாபாரிகள்.. நூதனமாக நடக்கும் கடத்தல்
- வழக்கமான போலீஸ் சோதனைகளைத் தவிர்ப்பதற்காக அவர்கள் இப்போது எக்ஸ்பிரஸ் ரயில்களைப் பயன்படுத்துகின்றனர்.
- விருந்துக்கு வரும் வடிக்கையாளர்களை குறிவைத்து கஞ்சா வியாபாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
புத்தாண்டு நெருங்கி வருவதால், பெங்களூருவில் கஞ்சா விற்பனையாளர்கள் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். காவல்துறையினரின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க, கடத்தல்காரர்கள் நகரத்திற்குள் போதைப்பொருளை கொண்டு செல்வதற்கான வழிமுறையாக ரயில்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
கஞ்சா மற்றும் பிற போதைப்பொருள் விநியோகத்தைத் தடுக்க உள்ளூர் காவல்துறையினரால் சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்ட போதிலும், கடத்தல்காரர்கள் ஒரு புத்திசாலித்தனமான வழியைக் கண்டுபிடித்துள்ளனர். வழக்கமான போலீஸ் சோதனைகளைத் தவிர்ப்பதற்காக அவர்கள் இப்போது எக்ஸ்பிரஸ் ரயில்களைப் பயன்படுத்துகின்றனர்.
ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் ஒடிசா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பெறப்பட்ட கஞ்சாவை கடத்தல்காரர்கள் டிராலி பைகளில் மறைத்து, மற்ற சாமான்களுடன் கலந்து நகருக்குள் கொண்டுருவருகின்றனர்.
சமீபத்திய நடவடிக்கையில், ரயில்வே போலீசார் ரூ.1 கோடி மதிப்புள்ள 86 கிலோ கஞ்சாவை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி, சட்டவிரோத வர்த்தகத்துடன் தொடர்புடைய 8 நபர்களைக் கைது செய்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருபவர்களை, குறிப்பாக விருந்துக்கு வருபவர்களை குறிவைத்து கஞ்சா வியாபாரிகள் செயல்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் அதிகம் உள்ள பெங்களூரில் சமீப காலமாக கஞ்சா பயணப்பட்டு அதிகரித்து வருகிறது.
ஐடி துறையில் வேலை பார்க்கும் படித்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் பலர் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி வருவது அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, பெங்களூருவுக்குள் கஞ்சா மற்றும் பிற சட்டவிரோதப் பொருட்கள் நுழைவதைத் தடுக்க போலீசார் தீவிர எச்சரிக்கையுடன் உள்ளனர்.