என் மலர்tooltip icon

    இந்தியா

    புறநகர் பகுதிக்கு இடம் பெயரும் திகார் சிறைச்சாலை: டெல்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
    X

    புறநகர் பகுதிக்கு இடம் பெயரும் திகார் சிறைச்சாலை: டெல்லி பட்ஜெட்டில் அறிவிப்பு

    • இந்தியாவின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்று திகார் சிறைச்சாலை.
    • இந்த சிறைச்சாலை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

    புதுடெல்லி:

    திகார் சிறைச்சாலை 1958-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றான இந்த சிறைச்சாலை, 400 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் ஒன்பது மத்திய சிறைச்சாலைகளைக் கொண்டுள்ளது.

    இந்நிலையில், முதல் மந்திரி ரேகா குப்தா டெல்லி சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திகார் சிறைச்சாலை நகரின் புறநகர்ப் பகுதிக்கு மாற்றும் திட்டம் கொண்டு வரப்படும்.

    2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அதற்கான கணக்கெடுப்பு மற்றும் ஆலோசனை சேவைகளுக்காக ரூ.10 கோடியை ஒதுக்கப்படும்.

    குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் இந்தச் சிறைச்சாலை இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    Next Story
    ×