என் மலர்
இந்தியா

தமிழக ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம்: மக்களவையில் திமுக நோட்டீஸ்
- மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற இருக்கிறது
- தமிழக ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் செயல்படுவதாக புகார்
தமிழக ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரத்தில் தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதில் அலுவல் பணிகள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு தமிழக ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நோட்டீஸில் ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் செயல்படுவதாக டி.ஆர். பாலு அதில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மணிப்பூர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதை ஏற்றுள்ள சபாநாயகர், விவாதம் நடத்துவதற்கான நேரம் தெரிவிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கிடையே இது குறித்து விவாதிக்க அனுமதிப்பாரா என்பது கேள்விக்குறியே.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், அரசுக்கும் இடையே பல்வேறு விசயங்கள் தொடர்பாக மோதல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story