search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோபமாக இருக்கும் மனைவியை சமாதானம் செய்ய முதலாளியின் ரூ.1 கோடி ரேஞ்ச் ரோவர் காரை திருடிச் சென்ற  கணவன்
    X

    கோபமாக இருக்கும் மனைவியை சமாதானம் செய்ய முதலாளியின் ரூ.1 கோடி ரேஞ்ச் ரோவர் காரை திருடிச் சென்ற கணவன்

    • காரை சுத்தம் செய்வதற்காக காரின் சாவியை ஓட்டுநர் கேட்டார்.
    • திருடப்பட்ட 6 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து மீட்டு ஓனரிடம் ஒப்படைத்து, ஓட்டுனரை கைது செய்தது.

    தன் மீது கோபமாக இருக்கும் மனைவியை சமாதனப்படுத்த கணவன், தனது முதலாளியின் விலையுயர்ந்த காரை திருடிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பலாசியா பகுதியில் வசிக்கும் ராகேஷ் அகர்வால், ரேஞ்ச் ரோவர் காரை வைத்திருக்கிறார். இந்த சொகுசு காரின் விலை சுமார் ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இவரின் வீட்டில் காண்ட்வா மாவட்டத்தைச் சேர்ந்த துர்கேஷ் ராஜ்புத் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) காலை காரை சுத்தம் செய்வதற்காக காரின் சாவியை ஓட்டுநர் கேட்டார். உரிமையாளரும் ஓட்டுநரை நம்பி சாவியைக் கொடுத்தார். ஆனால் அதன்பின் அவரை காணவில்லை. போன் செய்தும் எடுக்காததால் தனது கார் திருடப்பட்டதை உணர்ந்த ஓனர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீஸ், காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் மூலம் காரை திருடப்பட்ட 6 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து மீட்டு ஓனரிடம் ஒப்படைத்து, ஓட்டுனரை கைது செய்தது.

    விசாரணையின் போது, தன் மீது கோபமாக இருக்கும் தனது மனைவியை சமாதானப்படுத்தக் காரைத் திருடியதாக ஓட்டுநர் கூறியது போலீசை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

    Next Story
    ×