என் மலர்
இந்தியா
இரவில் தப்பான ரூட்டில் சென்ற டிரைவர்.. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த பெண் - பகீர் சம்பவம்
- ஏன் வேறு ரூட்டில் செல்கிறீர்கள் என பலமுறை கேள்வி கேட்டும், டிரைவர் பதிலளிக்கவில்லை
- வாகனம் நாகவாராவை அடைந்தபோது, ஓட்டுனர் திடீரென எதிர்பாராத விதமாக ஒரு மேம்பாலம் நோக்கி திரும்பினார்.
பெங்களூரில் டிரைவர் தப்பான வழியில் சென்றதால் ஓடும் ஆட்டோவில் இருந்து 30 வயது பெண் ஒருவர் குதித்துள்ளார்.
நேற்று [வியாழக்கிழமை] இரவு ஹோரமாவில் இருந்து தனிசந்திராவில் உள்ள தனது வீட்டிற்குச் செல்வதற்காக நம்ம யாத்ரி செயலி மூலம் ஆட்டோவை முன்பதிவு செய்திருந்தார்.
இருப்பினும், ஓட்டுநர் வழக்கமான வழியைப் பின்பற்றாமல், ஹெப்பல் பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கினார். ஏன் வேறு ரூட்டில் செல்கிறீர்கள் என பலமுறை கேள்வி கேட்டும், டிரைவர் பதிலளிக்கவில்லை. டிரைவரின் சிவந்த கண்களையும் அவர் போதையில் இருந்ததையும் அந்தப் பெண் கவனித்தார். வாகனம் நாகவாராவை அடைந்தபோது, ஓட்டுனர் திடீரென எதிர்பாராத விதமாக ஒரு மேம்பாலம் நோக்கி திரும்பினார்.
வண்டியை நிறுத்துமாறு பெண் கெஞ்சியும் ஓட்டுநர் கேட்கவில்லை. எனவே அச்சமைடைந்த அந்த பெண் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆபத்தான முடிவை எடுத்தார்.
தாழ்வான பாதையில் ஆட்டோ மெதுவாகச் சென்றபோது, அப்பெண் ஓடும் வாகனத்திலிருந்து குதித்தார். அதிஷ்டவசமாக பெரிய காயங்கள் எதுவுமின்றி அவர் உயிர்பிழைத்துள்ளார். பெண் வெளியே குதித்த பிறகு, டிரைவர் அவளை அணுகி ஆட்டோவுக்கு திரும்பும்படி சமாதானப்படுத்த முயன்றார்.
ஆனால் அதை புறக்கணித்த பெண் வேறு ஆட்டோவில் ஏறி பயணித்துள்ளார். இந்த அச்சமூட்டும் அனுபவத்தை பெண்ணின் கணவன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இரவு 9 மணிக்கு என் மனைவிக்கு இது நடந்துள்ளது, இன்னும் எத்தனை பெண்கள் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று பெங்களூரு போலீசை டேக் செய்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உதவிக்கு எங்களை DM செய்யுங்கள் என்று நம்ம யாத்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.