என் மலர்
இந்தியா
போலீஸ் பாதுகாப்புடன் விதிகளை மீறி ஜீப் ஓட்டிய துணை முதல்வரின் மகனுக்கு ரூ.7000 அபராதம்
- ராஜஸ்தான் துணை முதல்வரின் மகன் திறந்தவெளி ஜீப்பில் போக்குவரத்து விதிகளை மீறி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
- ஜீப்பிற்கு பின்னால், துணை முதல்வரின் மகனுக்கு ராஜஸ்தான் காவல்துறை பாதுகாப்பு வழங்கியபடி சென்றது.
போலீஸ் பாதுகாப்புடன் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகன் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவாவின் மகன் ஆஷூ பைர்வாவும் அவரது நண்பர்களும் திறந்தவெளி ஜீப்பில் போக்குவரத்து விதிகளை காற்றில் பறக்கவிட்ட படி பயணம் செய்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். ஜீப்பிற்கு பின்னால், துணை முதல்வரின் மகனுக்கு ராஜஸ்தான் காவல்துறை பாதுகாப்பு வழங்கியபடி சென்றது பெரும் கண்டனத்திற்கு உள்ளானது.
இந்த சம்பவம் குறித்து பேசிய துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவா, "என்னுடைய மகன் பள்ளி உயர் கல்வி தான் பயின்று வருகிறார், அவருடன் பள்ளி மாணவர்கள் தான் இருக்கிறார்கள். மகனுக்கு இன்னும் 18 வயது கூட ஆகவில்லை. மகான்களின் பாதுகாப்புக்காகவே போலீஸ் வாகனம் பின்னல் சென்றது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறி பயண செய்ததற்காக ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். விதிகளை மீறி ஜீப்பில் பெரிய அளவிலான டயரை பொருத்தியதற்காக 5000 ரூபாய் அபராதமும் சீட் பெல்ட் அணியாததற்கு 100 ரூபாய் அபராதமும் செல்போனில் பேசியபடியே பயணம் செய்தற்காக 1000 ரூபாய் அபராதம் என மொத்தமாக 7000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.