search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு- ஜார்க்கண்டில் அமலாக்கத்துறை சோதனை
    X

    ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு- ஜார்க்கண்டில் அமலாக்கத்துறை சோதனை

    • வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்புகள் பொருத்தும் ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
    • ராஞ்சியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    ஜனவரி 5-ந்தேதியுடன் அங்கு சட்டசபை பதவி காலம் முடிகிறது. நவம்பர் 2-வது அல்லது 3-வது வாரத்தில் ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்புகள் பொருத்தும் ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பான பண மோசடி தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள்.

    தலைநகர் ராஞ்சியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    ஐ.ஏ.எஸ். அதிகாரி மணீஷ் ரஞ்சன், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை மந்திரி மிதிலேஷ் குமார் தாகூரின் தனிப்பட்ட ஊழியர், சில அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×