search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகா கும்பமேளாவில் நான் நீராடியதாக போலியான படங்களை பரப்புகிறார்கள்- பிரகாஷ் ராஜ் புகார்
    X

    மகா கும்பமேளாவில் நான் நீராடியதாக போலியான படங்களை பரப்புகிறார்கள்- பிரகாஷ் ராஜ் புகார்

    • திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
    • இணையத்தில் பரவும் இந்த புகைப்படம் போலியானது என்று பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. இது பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும்.

    கும்பமேளாவை முன்னிட்டு உலகம் முழுவதும் இருந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    பல்வேறு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

    இந்நிலையில், மகா கும்பமேளாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் நீராடியதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    இதனையடுத்து, இணையத்தில் பரவும் இந்த புகைப்படம் போலியானது என்று பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

    பாலிவுட் நடிகர் பிரசாந்த் சம்பர்கி, பிரகாஷ் ராஜின் இந்த போலியான புகைப்படத்தை பகிர்ந்து "அவருடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு அகற்றப்படும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்த பதிவின் ஸ்க்ரீன்ஷாட்டை தனது எக்ஸ் பக்கத்தில் பாகிர்ந்துள்ள பிரகாஷ் ராஜ், " புனிதமான நிகழ்வில் கூட மதவெறியர்கள் கடைசியாக போலியான செய்திகளை பரப்புகிறார்கள். இதற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×