search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எனது மரணத்துக்கு மத்திய அரசுதான் பொறுப்பு.. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் விவசாயி மோடிக்கு கடிதம்
    X

    எனது மரணத்துக்கு மத்திய அரசுதான் பொறுப்பு.. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் விவசாயி மோடிக்கு கடிதம்

    • நவம்பர் 26 முதல் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நேற்று 17வது நாளை எட்டியது
    • 11 கிலோவுக்கும் அதிகமாக எடை குறைந்துள்ளார்

    பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தர பிரதேச மற்றும் அரியானாவின் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த வார தொடக்கத்தில் டெல்லி நோக்கி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இருப்பினும் மத்திய அரசு செவி சாய்க்கும் வரை போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லையான கானௌரியில் பஞ்சாப் விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், நவம்பர் 26 முதல் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நேற்று 17வது நாளை எட்டியது. அவர் தற்போது மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

    தாம் நாட்டின் சாதாரண விவசாயி என்றும், பிப்ரவரி 13-ம் தேதி முதல் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு மத்தியில் கனத்த இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

    பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். இந்த போராட்டத்தில் நான் இறந்தால் மத்திய அரசுதான் அதற்கு பொறுப்பு. போராட்டங்கள் நடக்கும் இடத்தில் போலீசார் ஏதாவது செய்தால் அந்த பொறுப்பும் அரசின் மீதுதான் விழும் என்று எழுதியுள்ளார்.

    ஜக்ஜித் சிங் தலேவால் நடத்தும் உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள புலம்பெயர் இந்தியர்களும் ஒரு நாள் உண்ணாவிரதத்தை கடைபிடிக்க முடிவு செய்துள்ளனர்.

    உண்ணாவிரதம் இருக்கும் தலேவால் 11 கிலோவுக்கும் அதிகமாக எடை குறைந்துள்ளார் என்றும் அவரது இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக உள்ளது என்றும் அவருடன் இருக்கும் சக விவசாய தலைவர் தெரிந்தார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    விவசாயிகளின் 13 அம்ச கோரிக்கைகளில், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி), கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மின் கட்டண உயர்வு, போராடிய விவசாயிகளுக்கு எதிரான போலீஸ் வழக்குகளை திரும்பப் பெறுதல் மற்றும் 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல் ஆகியவை அடங்கும்.

    உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள டிகுனியா அருகே உள்ள பன்பீர்பூர் கிராமத்தில் அக்டோபர் 3, 2021 அன்று விவசாயிகள் போராட்டத்தின்போது நடந்த கலவரத்தில் விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர், பத்து பேர் காயமடைந்தனர். அதில் போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர் ஒருவரும் அடங்குவர்.

    Next Story
    ×