என் மலர்
இந்தியா
X
பெங்களூருவில் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரெயிலில் திடீர் தீவிபத்து
Byமாலை மலர்19 Aug 2023 9:23 AM IST (Updated: 19 Aug 2023 9:27 AM IST)
- தீவிபத்து குறித்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெங்களூருவில் உள்ள சங்கொல்லி ராயண்ணா ரெயில் நிலையத்திற்கு இன்று காலை 5.45 மணிக்கு உத்யன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. நின்று கொண்டிருந்த ரெயிலின் பி1 மற்றும் பி2 பெட்டிகளில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வரத்தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீவிபத்து குறித்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கிய 2 மணி நேரத்திற்கு பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளதால் உயிர்சேதமோ, காயமோ இல்லை.
தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
X