என் மலர்
இந்தியா

மோடி அரசைப்போல் யாரும் தம்பட்டம் அடித்தது இல்லை: காங்கிரஸ் விமர்சனம்
- ஜி20 அமைப்பின் தலைமை பதவி என்பது சுழற்சி முறையில் கிடைக்கக்கூடியது.
- இந்தியா தலைவர் ஆவது தவிர்க்க இயலாதது.
புதுடெல்லி :
ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதையொட்டி, ஓராண்டுக்கு பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
ஜி20 அமைப்பின் தலைமை பதவி என்பது சுழற்சி முறையில் கிடைக்கக்கூடியது. இந்தியா தலைவர் ஆவது தவிர்க்க இயலாதது. இதற்கு முன்பு, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகள் தலைமை பொறுப்பை வகித்துள்ளன. ஆனால், எந்த நாடும் இப்போது மோடி அரசு செய்வதைப் போல் தம்பட்டம் அடித்தது இ்ல்லை.
கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதி அத்வானி கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. 'மோடி ஒரு புத்திசாலித்தனமான நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்' என்று அவர் கூறினார். ஜி20 தலைமை விஷயத்தில் அதுதான் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story