என் மலர்
இந்தியா
மணமேடையில் மாப்பிள்ளையை தாக்கிய முன்னாள் காதலி- வீடியோ வைரல்
- சம்பவத்தை கண்டு அங்கிருக்கும் பொது மக்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.
- காட்சிகள் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கிண்டலான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் மணமேடையில் புது மாப்பிள்ளையை இளம்பெண் தாக்கும் காட்சிகள் உள்ளது. அதில், மணப்பந்தலுடன் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மணமகனும், மணமகளும் மணக்கோலத்தில் நிற்கின்றனர். அப்போது மேடைக்கு வரும் ஒரு இளம்பெண் மணமகனை எட்டி உதைக்கிறார்.
இதனால் மணமகன் சிறிது தூரம் சென்று கீழே விழுகிறார். அவரை கைக்கொடுத்து தூக்கும் அந்த பெண், மீண்டும் சரமாரியாக தாக்கும் காட்சிகள் உள்ளது. இந்த சம்பவத்தை கண்டு அங்கிருக்கும் பொது மக்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.
மணமகனை தாக்கிய அந்த பெண் அவரது முன்னாள் காதலி என்று கூறப்படுகிறது. தனது கண் முன்பே வருங்கால கணவர் தாக்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த மணமகள் அந்த பெண்ணுடன் வாக்குவாதம் செய்கிறார். இந்த காட்சிகள் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கிண்டலான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.