என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![போக்குவரத்தில் சிக்கியதால் சாலையில் ஓடிய மணமகன்- வீடியோ போக்குவரத்தில் சிக்கியதால் சாலையில் ஓடிய மணமகன்- வீடியோ](https://media.maalaimalar.com/h-upload/2025/02/13/9265815-groom.webp)
போக்குவரத்தில் சிக்கியதால் சாலையில் ஓடிய மணமகன்- வீடியோ
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வீடியோ 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.
- பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் சில வீடியோக்கள் நகைச்சுவையாக இருக்கும். அந்த வகையில் தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில் மணமகன் ஒருவர் சாலையில் ஓடி செல்லும் காட்சிகள் உள்ளது. அவர் திருமணத்திற்கு சென்ற கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டுள்ளது. இதனால் வெகுநேரமாகியும் கார் அங்கிருந்து நகர முடியாத நிலை காணப்பட்டது.
திருமணத்திற்கான நேரமும் நெருங்கிய நிலையில் மாப்பிள்ளை வேறு வழியில்லாமல் திருமண மண்டபத்திற்கு செல்வதற்காக சாலையில் இறங்கி ஓடியுள்ளார். இதனை அவருக்கு பின்னால் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டார். அந்த வீடியோ 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
ஒரு பயனர், நான் இந்த நபர் மாப்பிள்ளை உடையில் ஏதோ திருடி செல்கிறாரோ அல்லது ஏதேனும் சம்பவத்தில் சிக்கி கொண்டாரோ என நினைத்தேன். அதன் பிறகு தான் அவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது தெரியவந்தது என பதிவிட்டார். மற்றொரு பயனர், திருமணத்திற்காகவா இவ்வாறு வேகமாக செல்கிறார். திருமணத்திற்கு பிறகு அவரால் எங்கும் ஓட முடியாது என கேலியாக பதிவிட்டார்.