என் மலர்
இந்தியா

ஏழுமலையான் கோவில் மீது வட்டமடித்த ஹெலிகாப்டர்கள்- திருப்பதியில் பரபரப்பு

- திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரம் மேல் பகுதியில் 2 ஹெலிகாப்டர்கள் வட்டமடித்தன.
- சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
திருப்பதி:
திருப்பதி மலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுவதால் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளன.
தடையை மீறி அடிக்கடி விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஏழுமலையான் கோவில் மீது பறந்து செல்கின்றன. இது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மத்திய விமான போக்குவரத்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரம் மேல் பகுதியில் 2 ஹெலிகாப்டர்கள் வட்டமடித்தன.
இதனைக் கண்ட அர்ச்சகர்கள், பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
ஹெலிகாப்டர்கள் எங்கிருந்து எங்கு சென்றது என எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறி வருகின்றனர்.