search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் பிரமுகர் உடலை சூட்கேசில் வைத்து இழுத்துச் செல்லும் கொலையாளி - அதிர்ச்சி வீடியோ
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    காங்கிரஸ் பிரமுகர் உடலை சூட்கேசில் வைத்து இழுத்துச் செல்லும் கொலையாளி - அதிர்ச்சி வீடியோ

    • உடலை எடுத்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.
    • காவல் துறையினர் சச்சின் என்ற நபரை நேற்று கைது செய்தனர்.

    அரியானா மாநிலம் ரோதக்கில் கொல்லப்பட்ட காங்கிரஸ் தொழிலாளி ஹிமானி நர்வாலின் வீட்டிற்கு வெளியே பதிவான ஒரு அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் குற்றம்சாட்டப்பட்ட சச்சின் ஒரு கருப்பு சூட்கேஸில் பெண்ணின் உடலை எடுத்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.

    கடந்த சனிக்கிழமை ரோதக்கில் உள்ள ஒரு பேருந்து நிலையம் அருகே சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில், பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் காவல் துறையினர் சச்சின் என்ற நபரை நேற்று கைது செய்தனர்.

    அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட சச்சின் நர்வாலை மொபைல் போன் சார்ஜிங் கேபிளால் அவரைக் கொன்று, உடலை சூட்கேஸில் அடைத்து வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.

    சிசிடிவி வீடியோவில், குற்றம் சாட்டப்பட்டவர் அமைதியாக சூட்கேஸுடன் பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு தெரு வழியாக நடந்து செல்வதை காாண முடிகிறது. சிசிடிவி காட்சிகளை போலீசார் சரிபார்த்துள்ளனர்.

    சச்சினை அந்த பெண்ணின் நண்பர் என்று போலீசார் விவரித்துள்ளனர். பணம் தொடர்பாக ஏற்பட்ட சண்டைக்கு பிறகு காங்கிரஸ் பிரமுகரான நர்வாலின் கழுத்தை சச்சின் நெரித்துள்ளார்.

    அரியானாவின் ஜஜ்ஜார் பகுதியை சேர்ந்த சச்சின், பணம் தொடர்பான தகராறு காரணமாக காங்கிரஸ் பிரமுகரை கொன்றதாக அரியானா காவல் துறையினர் கூறினர். அவர் பாதிக்கப்பட்டவரின் நண்பர் என்றும், ரோதக்கில் உள்ள அவரது வீட்டிற்கு அடிக்கடி செல்வார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    "உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது, சிறப்பு விசாரணைக் குழுக்களை அமைத்தோம். பாதிக்கப்பட்டவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது அவரை அடையாளம் காண்பதே எங்கள் முன்னுரிமையாக இருந்தது. குடும்பத்தினர் அவரை அடையாளம் கண்டதும், குற்றம் சாட்டப்பட்டவரை கண்டுபிடிக்க போலீசார் விரைவான விசாரணைகளை மேற்கொண்டனர்."

    "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, குற்றம் சாட்டப்பட்டவர் சமூக ஊடகங்கள் மூலம் அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்தார். மேலும் அவரது வீட்டிற்கும் சென்று வந்தார்," என்று கூடுதல் டிஜிபி கே.கே. ராவ் கூறியதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி 27-ம் தேதி இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்திற்கு பிறகு இந்த கொலை நடந்ததாக ராவ் கூறினார்.

    "இருவருக்கும் இடையே பணப் பிரச்சினை இருந்தது. ஆனால் அது என்ன, இதையெல்லாம் முதலில் சரிபார்க்க வேண்டும். இதுதான் கொலைக்கான காரணம் என்று நாங்கள் கூற முடியாது," என்று அவர் மேலும் கூறினார்.



    Next Story
    ×