search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேவாலயம் அருகே சூட்கேசில் கிடந்த மனித எலும்புக்கூடு- போலீசார் விசாரணை
    X

    தேவாலயம் அருகே சூட்கேசில் கிடந்த மனித எலும்புக்கூடு- போலீசார் விசாரணை

    • கொல்லத்தில் உள்ள ஒரு சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் அருகே கல்லறை தோட்டம் உள்ளது.
    • கொல்லம் கிழக்கு போலீசார் சம்பவ இடம் வந்து சூட்கேசை கைப்பற்றி சோதனை செய்தனர்.

    கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஒரு சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் அருகே கல்லறை தோட்டம் உள்ளது. இங்குள்ள குழாயை சீர் செய்யும் பணிக்கு இன்று காலை தொழிலாளர்கள் சென்றனர். அப்போது அங்கு ஒரு சூட்கேஸ் கேட்பாரற்ற நிலையில் கிடந்துள்ளது.

    அதனை பார்த்த தொழிலாளர்கள், இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கொல்லம் கிழக்கு போலீசார் சம்பவ இடம் வந்து சூட்கேசை கைப்பற்றி சோதனை செய்தனர். இதில் பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்ட மனித எலும்புக் கூடு பெட்டியில் இருப்பது தெரியவந்தது. அது யாருடையது என்பது தெரியவில்லை.

    அதேநேரம் அது 2 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. அதனை தடயவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பிய போலீசார், அப்பகுதியில் மாயமானவர்கள் குறித்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×