என் மலர்
இந்தியா
மனைவி சமாதியில் இதய வடிவிலான நினைவுச்சின்னம் அமைத்த கணவர்
- மனைவி தன்னை விட்டு வெகு தூரம் சென்று விட்டதை உணர்ந்த சிவராஜ் மனைவியின் சமாதியில் நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்தார்.
- தினமும் தனது மகள்களுடன் மனைவியின் சமாதிக்கு சென்று வணங்கி வருகிறார்.
தெலுங்கானா:
தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா மாவட்டம் கனபர்த்தியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி மானசா. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். சிவராஜ் தனது மனைவி மானசா மீது அளவு கடந்த பாசம் வைத்து இருந்தார்.
இந்த நிலையில் மானசா திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். உடல் ரீதியாக தனது மனைவி தன்னை விட்டு வெகு தூரம் சென்று விட்டதை உணர்ந்த சிவராஜ் மனைவியின் சமாதியில் நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்தார்.
அதன்படி மானசாவின் சமாதியில் தன்னை பதிக்கும் வகையில் காதல் சின்னமான 8 அடி உயரத்தில் இதய வடிவிலான நினைவு சின்னத்தை அமைத்துள்ளார்.
தினமும் தனது மகள்களுடன் மனைவியின் சமாதிக்கு சென்று வணங்கி வருகிறார்.
ஷாஜகான் தனது மனைவி மீதான அன்பின் காரணமாக தாஜ்மஹால் கட்டினார். நான் மனைவியின் நினைவு என்றும் நிலைத்திருக்க காதல் நினைவுச்சின்னம் அமைத்துள்ளேன் என தெரிவித்தார்.