search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி

    • ஒடிசாவின் ஒவ்வொரு குடிமகன் முன்பும் சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும்.
    • ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்திருக்கிறார்.

    பிரதமர் மோடி, "நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்" என்று கூறியிருப்பது மீண்டும் விமர்சனமாகி உள்ளது.

    ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா, "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

    அவரது பேச்சுக்காக தேசிய ஊடகங்கள் மற்றும் ஒடிசாவின் ஒவ்வொரு குடிமகன் முன்பும் சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

    இதைதொடர்ந்து, பூரி ஜெகன்நாதர் பற்றி பேசிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பூரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா 3 நாட்கள் விரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.

    மேலும், "மோடி பூரி ஜெகன்நாதரின் பக்தர் என சொல்வதற்கு பதிலாக பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர்" என தவறுதலாக கூறிவிட்டதாக வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில், ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்திருக்கிறார்.

    அதில் பிரதமர் மோடி, "நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை.

    ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்.

    நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது கிடையாது. அது கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும்" என்றார்.

    "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று பாஜக வேட்பாளர் பேசிய கருத்து சர்சையை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி, "நான் மனிதப் பிறவியே அல்ல" என்று கூறியிருப்பது மீண்டும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×