என் மலர்
இந்தியா
'உயிரிழந்த நபர்' தனது இறப்பு சான்றிதழுடன் ஐஏஎஸ் அலுவலகத்துக்கு வந்து உதவி கேட்ட பகீர் சம்பவம்
- அவரது மரணத்திற்குப் பிறகு நிலம் ஒருபோதும் மாற்றப்படவில்லை
- குடும்ப ரேஷன் கார்டில் இருந்து கணபதியின் பெயர் நீக்கப்பட்டு, ஆதார் லாக் செய்யப்பட்டது.
கர்நாடக பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த 62 வயது நபர் ஒருவர் தனது இறப்பு சான்றிதழுடன் துணை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெலகாவி துணை ஆணையர் முகமது ரோஷனின் அலுவலகத்திற்கு தனது இறப்புச் சான்றிதழுடன் சென்ற கணபதி ககட்கர் என்ற அந்த நபர் சென்றுள்ளார்.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் செய்த சிறு பிழையால் கணபதி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கணபதி அவர் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் பல்வேறு அரசாங்க சலுகைகளை இழந்தார்.
கணபதியும் அவரது சகோதரர்களும் 1976 ஆம் ஆண்டு காலமான தங்கள் தாத்தா விட்டுச் சென்ற நிலத்திற்கு வாரிசுச் சான்றிதழுக்காக விண்ணப்பித்தபோது இந்த பிரச்சினை தொடங்கியுள்ளது.
அவரது மரணத்திற்குப் பிறகு நிலம் ஒருபோதும் மாற்றப்படவில்லை, மேலும் அவரது மூன்று மகன்களும் இறுதியில் கணபதி உட்பட அவரது எட்டு பேரன்களுக்கு சொத்தை விட்டுச் சென்றனர்.
நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றும் முயற்சியில், பேரன்கள் தங்கள் தாத்தாவின் இறப்பு சான்றிதழ் காணாமல் போனதால் தாமதத்தை எதிர்கொண்டனர். அதன்பின் நீதிமன்றத்தை அணுகினர். புதிய இறப்பு சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும், ஹிண்டல்காவில் உள்ள வருவாய் அலுவலகத்தில் கணினி ஆபரேட்டர் ஒருவர் மறைந்த தாத்தாவின் ஆதார் எண்ணுக்குப் பதிலாக கணபதியின் ஆதார் எண்ணை தவறுதலாக பதிவுசெய்துள்ளார்.
இதனால், குடும்ப ரேஷன் கார்டில் இருந்து கணபதியின் பெயர் நீக்கப்பட்டு, ஆதார் லாக் செய்யப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றும் பலமுறை முயற்சி செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடத்த 2023 இல் கணபதி அந்த எழுத்தர் செய்த பிழையை கண்டுபிடித்துள்ளார். இருப்பினும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திங்களன்று, அவரது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞருடன் கணபதி, துணை கமிஷனர் ரோஷனை அணுகினார். அவர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.