search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்திய நதிகளில் 6,327 டால்பின்கள் உள்ளன- பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் தகவல்
    X

    இந்திய நதிகளில் 6,327 டால்பின்கள் உள்ளன- பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் தகவல்

    • உத்தரபிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான டால்பின்கள் கண்டறியப்பட்டு உள்ளன.
    • டால்பின் வாழ்விடப் பகுதிகளில் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச்சென்று காட்ட பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    சாசன்:

    பிரதமர் மோடி நேற்று குஜராத்தின் கிர் வனவிலங்கு சரணாலய தலைமை அலுவலகத்தில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் 7-வது கூட்டத்தை நடத்தினார்.

    அதில் அவர் இந்திய நதிகளில் வாழும் டால்பின்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இந்தியாவின் நதிகளில் 6,327 டால்பின்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

    8 மாநிலங்களை சேர்ந்த 28 நதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 8,500 கி.மீ. பகுதியில் இந்த ஆய்வு நடந்தது.

    இதில் உத்தரபிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான டால்பின்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அதைத்தொடர்ந்து பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களிலும் அதிக டால்பின்கள் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    உள்ளூர் மக்கள் மற்றும் கிராம மக்களின் ஈடுபாட்டுடன் டால்பின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், டால்பின் வாழ்விடப் பகுதிகளில் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச்சென்று காட்டவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    Next Story
    ×