என் மலர்
இந்தியா
ஈரான், இஸ்ரேல் செல்வோர் எச்சரிக்கையா இருக்கனும் - வெளியுறவு துறை அமைச்சகம் எச்சரிக்கை
- எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தல்.
- தூதரகத்துடன் தொடர்பில் இருக்க அறிவுறுத்துகிறோம்.
இந்தியாவில் இருந்து ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு வர்த்தக ரீதியிலான வான்வழி போக்குவரத்து திறக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு பயணம் செய்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி இருக்கிறது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் தங்களது வான்வழியை வர்த்தக போக்குவரத்திற்கு திறந்துள்ளன. எனினும், இந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், வான்வழி எவ்வளவு காலம் வரை திறக்கப்பட்டு இருக்கும் என்பது கேள்விக்குறியான விஷயம் தான்.
"அந்த பகுதியில் நிலவும் சூழலை தொடர்ச்சியாக உற்று கவனித்து வருகிறம். ஈரான் மற்றும் இஸ்ரேல் வான்வழியை கடந்த சில நாட்களாக திறந்து வைத்துள்ளன. இந்த நாடுகளுக்கு பயணம் செய்வோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும், இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்துகிறோம்," என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.