search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய பட்ஜெட்டில் புதிய நேரடி வரி சட்ட மசோதா அறிமுகம்- நிர்மலா சீதாராமன்
    X

    மத்திய பட்ஜெட்டில் புதிய நேரடி வரி சட்ட மசோதா அறிமுகம்- நிர்மலா சீதாராமன்

    • நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் ஆகும்.
    • பட்ஜெட்டில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    டெல்லி:

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் ஆகும்.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய குழு ஊதிய உயர்வு உள்ளிட்டவை இந்த பட்ஜெட்டில் இடம் பெறுகிறது. இதனால் பட்ஜெட்டில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் புதிய நேரடி வரி சட்டத்திற்கான மசோதாவை அறிமுகப்படுத்த உள்ளார். 63 ஆண்டுகள் பழமையான வருமான வரி சட்டத்தை மாற்றுவதற்கான புதிய சட்ட விதிகள் குறித்து நிபுணர்கள் குழு தீவிர ஆய்வு செய்துள்ளனர்.

    வரி செலுத்துவோர் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையில் புதிய நேரடி வரிச் சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக நிதி அமைச்சகம் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கடந்த 8 வாரங்களாக தீவிர ஆலோசனை செய்து புதிய விதிகளை உருவாக்கி உள்ளனர்.

    கடந்த 2019 நாடாளுமன்றத்தில் நேரடி வரிவிதிப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 3-வது முயற்சியாக நேரடி வரி சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.

    வரி செலுத்தக்கூடிய சாமானியர்கள் சட்ட விதிகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் புதிய விதிகளை அமைக்க வேண்டும் என குழுவிடம் மத்திய அரசு வலியுறுத்தியது. அதனடிப்படையில் நிபுணர்கள் குழு புதிய விதிகளை உருவாக்கி உள்ளது.

    இந்த புதிய நேரடி வரி சட்டத்திற்கான மசோதா பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி அல்லது 2-வது பாதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிகிறது.

    8-வது ஊதியக் குழுவின் ஊதிய உயர்வால் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ள நிலையில், தனியார் துறை ஊழியர்கள் தங்களது செலவழிப்பு வருவாயை அதிகரிக்க வருமான வரி விலக்கு கோரி வருகின்றனர். தனிநபர்கள் மீதான வரிச்சுமையைத் தளர்த்துவது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பான நுகர்வைத் தூண்டுவதற்கு முக்கியமானது.

    2025-26 பட்ஜெட்டில் தனிநபர்களுக்கு அரசாங்கம் வரி விலக்கு அளிக்க வேண்டும்.

    அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழுவை அரசாங்கம் அமைத்திருக்கும் அதே வேளையில், தனிநபர் வரி செலுத்துவோருக்கு சலுகைகள் அளித்தால் நடுத்தர வர்க்கத்தின் கைகளில் அதிக பணத்தை விட்டுச் செல்வதோடு பொருளாதாரத்தின் நுகர்வு உந்துதல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் என நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக வருமான வரித்துறை நிபுணர்கள் கூறுகையில்:-

    நடுத்தர வர்க்கத்தினரிடம் இருந்து வரி விலக்கு பெற வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. "நடுத்தர வர்க்கம் தாங்கள் வரி செலுத்துவதாக நம்புகிறார்கள், ஆனால் அரசாங்கத்திடம் இருந்து போதுமான உதவிகளைப் பெறவில்லை."

    2013-14ல் 3.35 கோடியாக இருந்த வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 2023-24ல் 7.54 கோடியாக உயர்ந்தாலும், உண்மையில் வரி செலுத்துவோர் 10 ஆண்டுகளில் 1.66 கோடியில் இருந்து 2.81 கோடியாக எப்படி உயர்ந்துள்ளனர். பூஜ்ஜிய வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் தனிநபர்கள் 2013-14ல் 1.69 கோடியாக இருந்து 2023-24ல் 4.73 கோடியாக உயர்ந்துள்ளது.

    வருமான வரி விலக்கு வரம்பு பல ஆண்டுகளாக அதிகரித்து வருவதே இதற்கு காரணம். "இது அரசாங்கத்தின் சமூக-அரசியல் நோக்கத்தை பூர்த்தி செய்தாலும், அது பொருளாதார நோக்கத்தை பூர்த்தி செய்யவில்லை. பல நாடுகளில், எந்த வருமானமும் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.

    பணவீக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையிலும், அரசாங்கத்தின் வருமான வரி வசூலில் கார்ப்பரேட் வரி அதிகமாக உள்ளது. இதனால் தனி நபர் வரியில் மாற்றம் கொண்டு வரலாம் என்றனர்.

    Next Story
    ×