search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: ரெயில்வே துறைக்கு போதாத காலம்... மீண்டும் விமர்சனத்திற்குள்ளாகும் அவலம்
    X

    VIDEO: ரெயில்வே துறைக்கு போதாத காலம்... மீண்டும் விமர்சனத்திற்குள்ளாகும் அவலம்

    • ஓடும் ரெயிலில் இருந்து கதவை திறந்து வெளியில் குப்பைகளை வீசி எறிகிறார்.
    • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சமீப காலமாக ரெயில்வே துறைக்கு என்ன நேரமோ என்று தெரியவில்லை. ரெயில்வே துறை சம்பந்தமான பிரச்சனைகள் தொடர்பான வீடியோக்கள் பல வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள வீடியோ ஒன்று ரெயில்வே துறையில் நடைபெறும் அலட்சியத்தை எடுத்துக்காட்டுகிறது.

    யார் பொறுப்பு என்ற தலைப்பில் 49 வினாடிகளே ஓடும் வீடியோவில், ஏ.சி. கோச் பெட்டியில் பணிபுரியும் மூத்த அதிகாரி ஒருவர் கையில் குப்பைகளுடன் காணப்படுகிறது. அப்போது அவர் ஓடும் ரெயிலில் இருந்து கதவை திறந்து வெளியில் குப்பைகளை வீசி எறிகிறார். இதுகுறித்து அங்கிருந்த பயணிகள் கேள்விகள் கேட்டும், அதற்கு பதிலளிக்காமல், மீண்டும் அங்குள்ள குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை வீசி எகிறார்.

    இதனை தொடர்ந்து பயணிகள் கேள்விகள் கேட்டதற்கு குப்பை கொட்ட வேறு எங்கும் இடம் இல்லை என்று கூறி தனது செயல்களை நியாயப்படுத்துகிறார் அந்த மூத்த அதிகாரி.

    இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.



    Next Story
    ×