என் மலர்
இந்தியா
கர்நாடக சட்டசபை தேர்தல்: எளிமையான பா.ஜனதா வேட்பாளர் ஸ்ரீவத்சவா
- ஸ்ரீவத்சவா மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகிறார்.
- சிறிய ஓட்டு வீட்டிலேயே அவர் வசித்து வருகிறார்.
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்கள். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை(வியாழக்கிழமை) கடைசி நாளாகும். பா.ஜனதா இன்னும் 2 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 15 தொகுதிகளுக்கும், ஜனதாதளம்(எஸ்) கட்சி இன்னும் 84 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டி உள்ளது.
நேற்று முன்தினம் பா.ஜனதா 10 தொகுதிகளுக்கு 3-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில், மைசூரு கிருஷ்ணராஜா தொகுதியில் முன்னாள் மந்திரியும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான ராமதாசுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஸ்ரீவத்சவா என்பவருக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கி உள்ளது.
சங்பாரிவார் பின்னணி மற்றும் கட்சியின் விசுவாசியான ஸ்ரீவத்சவா தேர்வு செய்யப்பட்டிருப்பது தொண்டர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. ஏனெனில் ஸ்ரீவத்சவா மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகிறார். சிறிய ஓட்டு வீட்டிலேயே அவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் எளிமையான பா.ஜனதா வேட்பாளர் ஸ்ரீவத்சவாவின் வீட்டின் படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.