என் மலர்
இந்தியா
குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும்: பா.ஜனதா தலைவர்
- ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டு வெடித்து 9 பேர் காயம்.
- உபா மற்றும் குண்டு வெடிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை.
பெங்களூருவில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. முதலில் சிலிண்டர் வெடித்ததாக கூறப்பட்டது. பின்னர் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது உறுதி செய்யப்பட்டது.
குண்டு வெடிப்பு தொடர்பாக உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் தப்ப முடியாது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் பா.ஜனதாவினர் கர்நாடகா அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றனர். ஒரு சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய நிலையில், இந்த சம்பவத்தை தடுத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கார்நாடகா மாநில பாரதிய ஜனதா தலைவர் வி.ஓய. விஜேந்த்ரா கூறுகையில் "இந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை என்.ஐ.ஏ.-யிடம் ஒப்படைக்க வேண்டம். முதலமைச்சர் சித்தராமையா இந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து கேள்விப்பட்டு மிகவும் கவலையடைந்தேன். சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்." என்றார்.