என் மலர்
இந்தியா

கர்நாடகா: பிடித்த ஓட்டல் பெயரை கேட்டதும் இறந்த நபருக்கு மீண்டும் உயிர் வந்த அதிசயம்

- பிஷ்டப்பா குடிமணி (45) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- பிஷ்டப்பா குடிமணிக்கு இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் மருத்துவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபருக்கு மீண்டும் உயிர் வந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.
பிஷ்டப்பா குடிமணி (45) என்ற நபர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மனைவி ஷீலா கணவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றி வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி, "உங்களுக்கு பிடித்த தாபா வந்துவிட்டது. நீங்கள் இரவு உணவு சாப்பிடுகிறீர்களா?" என்று அழுதுகொண்டே கூறியவுடன் பிஷ்டப்பா குடிமணிக்கு திடீரென்று உயிர் வந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
பிஷ்டப்பா குடிமணிக்கு இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளும் இரங்கல் அஞ்சலி போஸ்டர்களும் தயார் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு மீண்டும் உயிர் வந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.