என் மலர்
இந்தியா
முல்லைப் பெரியாறு அணை நீரின் அளவை 120 அடியாக குறைக்கக்கோரி கேரளா புதிய மனு தாக்கல்
- முல்லைப் பெரியாறு அணை மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று பல்வேறு ஆய்வுகளை நடத்திய பிறகு சுப்ரீம் கோர்ட்டு 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
- கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் மேத்யூ நெடும்பாரா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
புதுடெல்லி:
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும், அணையில் தேக்கி வைக்கும் நீரின் அளவை 120 அடியாக குறைக்கவும் வலியுறுத்தி கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் மேத்யூ நெடும்பாரா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று பல்வேறு ஆய்வுகளை நடத்திய பிறகு சுப்ரீம் கோர்ட்டு 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
136 அடியில் இருந்து 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் சென்னை, மும்பை, டெல்லி போன்ற நகரங்களுக்கும் கூட ஆபத்து ஏற்படும். இந்த அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டால் அணைக்கு பாதுகாப்பு இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது.
இதனைக் கருத்தில் கொண்டு மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.