என் மலர்
இந்தியா
X
சிறுவனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை
ByMaalaimalar26 Sept 2023 10:45 AM IST
- புகாரின்பேரில் பிரகாஷ்குமாரை அடூர் போலீசார் கைது செய்தனர்.
- வழக்கு விசாரணை அடூர் விரைவு கோர்ட்டில் நடந்துவந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் பன்னிவிழா பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்குமார்(வயது43). இவர் கடந்த 2020-ம் ஆண்டு, வாடகைக்கு வீடு பார்த்து தங்கவைத்த ஒரு பெண்ணின் மகனான 15 வயது சிறுவனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்திருக்கிறார். இது தொடர்பான புகாரின்பேரில் பிரகாஷ்குமாரை அடூர் போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கு விசாரணை அடூர் விரைவு கோர்ட்டில் நடந்துவந்தது.
இந்தநிலையில் அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட பிரகாஷ்குமாருக்கு இயற்கைக்கு மாறான உறவு வைத்தல், போக்சோ, மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு மொத்தம் 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சமீர்தான் தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
Next Story
×
X