என் மலர்
இந்தியா

நிதிஷ் குமாருக்கு 'பாரத ரத்னா' கொடுத்தே ஆகணும். தொண்டர்கள் அடம்.. அல்லோலப்படும் பீகார் சி.ம். ஆபீஸ்
- மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார்.
- புகழ் பெற்ற சோசியலிசவாதியும் பீகாரின் முதல்வருமான நிதிஷ் குமார் அவர்களுக்கு..
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனதா தள கட்சித் தலைவரும் பீகார் முதல்வருமான நிதஷ் குமாருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தத்தொடங்கியுள்னர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார். இந்நிலையில் இன்று நடக்க ஜனதா தள கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை ஒட்டி சோட்டு சிங் என்ற முக்கிய தலைவர் இந்த போஸ்டர்கள், கட் அவுட்கள் மூலம் நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இவை கட்சி அலுவலகம் உட்பட வழிநெடுக வைக்கப்பட்டுள்ளன.
அதில் நிதிஷ் குமாருடன் கட்சியை சேர்ந்த தலைவர்கள் படங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் புகழ் பெற்ற சோசியலிசவாதியும் பீகாரின் முதல்வருமான நிதிஷ் குமார் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அவர் மாநிலத்துக்கு செய்தவையும் அதில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் புடைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறன.