என் மலர்
இந்தியா

"அம்பேத்கர் வாழ்க.." டெல்லி சட்டசபையில் அமளி - அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்டு!

- அம்பேத்கர் வாழ்க என்று ஆம்ஆத்மியினர் கோஷமிட்டனர். பதிலுக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் மோடி வாழ்க என்று முழக்கங்களை எழுப்பினார்கள்.
- அம்பேத்கர் உருவப்படத்தை அகற்றுவதன் மூலம் பாஜக அதன் உண்மையான நிறத்தை காட்டியுள்ளது.
கடந்த பிப்ரவரி டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது.
மொத்தம் உள்ள 70 இடங்களில் பா.ஜனதா 48 தொகுதிகளை கைப்பற்றியது. ஆம்ஆத்மிக்கு 22 இடங்கள் கிடைத்தது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் அதிஷி தேர்ந்தெடுக்கடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் டெல்லி சட்டசபையின் முதல் கூட் டத்தொடர் நேற்று தொடங்கியது. 3 நாள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளான நேற்று எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்.
அதன்பிறகு ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்கு வெளியே பெண்களுக்கு ரூ.2500 உதவி தொகை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இன்றைய 2-வது நாள் கூட்டத்தில் கடந்த 14 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படாமல் இருந்த தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியதும் துணை நிலை ஆளுநர் விஜேந்தர் குப்தா உரையாற்றினார்.
அப்போது எதிர்கட்சி தலைவர் அதிஷி தலைமை யில் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க் கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத்சிங் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
அம்பேத்கர் வாழ்க என்று அவர்கள் கோஷமிட்டனர். பதிலுக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் மோடி வாழ்க என்று முழக்கங்களை எழுப்பினார்கள்.

அமளியில் ஈடுபட்ட ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் அதை கேட்காமல் தொடர்ந்து முழக்கமிட்டனர்.
இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 12 பேரை சபாநாயகர் சஸ்பெண்டு செய்து நட வடிக்கை எடுத்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அதிஷி, கோபால்ராய், வீர் சிங், முகேஷ், சுபேர் அக மது, அனில்ஜா, ஜர்னல் சிங் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க் கள் இன்று நாள் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து சட்டசபைக்கு வெளியேயும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிஷி கூறியதாவது, அம்பேத்கர் உருவப்படத்தை அகற்றுவதன் மூலம் பாஜக அதன் உண்மையான நிறத்தை காட்டியுள்ளது.
அம்பேத்கரை விட மோடி பெரியவர் என்று பாஜக நினைக்கிறதா? ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் அம்பேத்கர் முழக்கங்களை எழுப்பியபோது, அவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ஆனால் பாஜக எம்.எல்.ஏக்கள் பிரதமர் மோடியின் முழக்கங்களை எழுப்பியபோது, அவர்கள் எதுவும் சொல்லவில்லை. இதன் பொருள் பா.ஜ.க. அம்பேத்கரை வெறுக்கிறது என்று தெரிவித்தார்.
சட்டசபையில் தொடர்ந்து ஆளுநர் உரையாற்றினார். அவரது உரையில் மக்களுக்கு அளிக்கப் பட்ட அனைத்து வாக்குகளும் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.