search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் லாரி கவிழ்ந்து விபத்து: ஆட்டோ மீது இரும்புக் கம்பிகள் விழுந்ததில் உடல் நசுங்கி 7 பேர் பலி
    X

    தெலுங்கானாவில் லாரி கவிழ்ந்து விபத்து: ஆட்டோ மீது இரும்புக் கம்பிகள் விழுந்ததில் உடல் நசுங்கி 7 பேர் பலி

    • ரயில்வே தண்டவாளங்கள் அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகளை லாரி ஏற்றிச் சென்றது.
    • நான்கு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    தெலுங்கானாவில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம், மாமுனூர் பிரதான சாலையில் இன்று காலை 11 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

    ரயில்வே தண்டவாளங்கள் அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, பாரத் பெட்ரோல் பம்ப் அருகே சாலையில் வந்துகொண்டிருந்த 2 ஆட்டோக்களை முந்திச் செல்ல முயன்றது.

    லாரி முந்திச் சென்றபோது கட்டுக்குப்பட்டை இழந்து கவிழ்ந்ததில், அதில் இருந்த இரும்புக் கம்பிகள் ஆட்டோ மீது விழுந்துள்ளது. இதில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

    மேலும் 6 படுகாயமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். லாரி ஓட்டுநர் குடிபோதையிலிருந்தது தெரியவந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×