search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பூனையின் கால்களை கட்டி கொடூரமாக நாயை விட்டு கடிக்க வைத்து ரீல்ஸ் எடுத்த நபர் கைது
    X

    பூனையின் கால்களை கட்டி கொடூரமாக நாயை விட்டு கடிக்க வைத்து ரீல்ஸ் எடுத்த நபர் கைது

    • கால்கள் கட்டப்பட்ட பூனையை நாய் ஒன்று கொடூரமாக தாக்கும் வீடியோவை மன்தீப் இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.
    • இந்த வீடியோ இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் விலங்குகளை துன்புறுத்தும் விதமாக ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மன்தீப் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

    மன்தீப் என்ற நபர் தனது இன்ஸ்டாகிராமில், கால்கள் கட்டப்பட்ட பூனையை நாய்கள் கொடூரமாக தாக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தொடர்பாக யுவி என்ற நபர், விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளையுடன் இணைந்து காவல்துறையில் புகார் அளித்தார்.

    இதனையடுத்து மன்தீப் மீது எஃப்ஐஆர் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த நாயை போலீசார் மீட்டனர்.

    Next Story
    ×