search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாழ காதல் மனைவிக்கு எச்.ஐ.வி. ஊசி போட்ட கணவர்
    X

    கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாழ காதல் மனைவிக்கு எச்.ஐ.வி. ஊசி போட்ட கணவர்

    • சரணுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
    • மருத்துவ பரிசோதனையில் மாதவிக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடே பள்ளியை சேர்ந்தவர் சரண் (வயது 35) இவரும் மாதவி (32) என்பவருக்கும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

    தம்பதிக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் சரணுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரை திருமணம் செய்து கொள்ள சரண் முடிவு செய்தார்.

    இதற்கு மாதவி இடையூறாக இருப்பார் என்பதால் அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட வைக்க வேண்டும் என முடிவு செய்தார்.

    மாதவியிடம் என்னுடைய தம்பிகளுக்கு ஆண் குழந்தைகள் உள்ளனர். நமக்கு பெண் குழந்தை மட்டுமே உள்ளது. நாம் இறந்தால் மகன் தான் இறுதி சடங்கு செய்ய வேண்டும்.

    எனவே நமக்கு ஆண் குழந்தை வேண்டும் என கூறினார். இதற்காக மங்களகிரியை சேர்ந்த டாக்டர் ஒருவர் உதவியுடன் சத்து மருந்து கிடைப்பதாக கூறி அழைத்துச் சென்றார்.

    அங்கு வைத்து மாதவிக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தினார். அதற்குப் பிறகு மாதவி உடல் சோர்வு ஏற்பட்டு பாதிக்கப்பட்டார்.

    மருத்துவ பரிசோதனையில் அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் மாதவி அதிர்ச்சி அடைந்தார்.

    கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் என்னை ஏமாற்றி என்னுடைய கணவர் எச்ஐவி தொற்று ஊசியை எனக்கு செலுத்தியுள்ளார் என மாதவி தாடே பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சரணை கைது செய்தனர்.

    இதற்கு உடந்தையாக இருந்த டாக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×