என் மலர்
இந்தியா
அதிகாலை 2 மணிக்கு மீட்டிங்.. ZEPTO வின் TOXIC வேலை - சி.இ.ஓ. விளக்கம்
- மீட்டிங்கள் அனைத்தும் நள்ளிரவு 2 மணிக்கு நடத்தப்படும் சூழ்நிலையே உள்ளது.
- ரூ. 30,000 க்கு அதிகமான விலையுள்ள செல்போன் பயன்படுத்துபவர்களிடம் அதிக பணம் வசூலிக்கப்படுகிறது.
பிரபல மளிகை சாமான் மற்றும் காய்கறிகள் டெலிவரி நிறுவனமான ஜெப்டோ [Zepto] நிறுவனத்தின் சிஇஓ ஆதித் பாலிச்சா தனது நிறுவனத்தில் டாக்சிக் வொர்க் காலச்சாரம் இருப்பதை மறுத்துள்ளார். வேலை வாழ்க்கை சமநிலையை மறுக்கும் 84 மணிநேர வேலை நேர நடைமுறையை ஆதரித்து கிரப்ட்டைல் சிஇஓ தக்ஷ் குப்தாவின் பதிவை ஆதித் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து இந்த விவாதம் வெடித்துள்ளது.
ரெட்டிட் சமூக வலைதள பயனர் ஒருவர் தான் ஒரு வருடமாக வேலை செய்வதாகவும், அது "மிகவும் டாக்சிக் [ நச்சுத்] தன்மை வாய்த்த பணிச்சூழலை கொண்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார். சிஇஓ ஆதித் மதியம் 2 மணிக்கு தான் தனது வேலைகளை தொடங்குகிறார்.
ஏனெனில் அவரால் காலையில் வேகமாக எழுந்திருக்க முடியவில்லை. இதனால் மீட்டிங்கள் அனைத்தும் நள்ளிரவு 2 மணிக்கு நடத்தப்படும் சூழ்நிலையே உள்ளது.மேலும் எந்த மீட்டிங்கும் சொன்ன நேரத்தில் நடப்பதில்லை. நேரம் மாற்றப்படுகிறது அல்லது தள்ளி வைக்கப்படுகிறது.
இதனால் ஊழியகர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஜெப்டோ இளைஞர்களை வேலைக்கு எடுக்க விரும்புகிறது, ஏனெனில் வயதானவர்கள் 14 மணி நேர் வேலையைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள்.
ஜெப்டோ செயலியில் கஸ்டமர்களிடம் இருந்து பணம் பறிக்கும் பலவித மர்மமான செயல்முறைகள் உள்ளன. ரூ.30,000 க்கு அதிகமான விலையுள்ள செல்போன் பயன்படுத்துபவர்களிடம் அதிக பணம் வசூலிக்கப்படுகிறது.
குறைந்த சம்பளத்தில் கிடைப்பதால் இளைஞர்களை வேலைக்கு எடுக்கின்றனர். மேலும் மார்ச் மாதத்தில் அதிக பணிநீக்கங்கள் [layoffs] நடக்கும் என்று அந்த முன்னாள் ஊழியர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள சிஇஓ ஆதித், வேலை - வாழ்க்கை சமம்பாட்டுக்கு தான் எதிரானவன் இல்லை எனவும், மற்ற நிறுவங்களும் வேலை வாழ்க்கை சமநிலையை ஊழியர்களுக்கு வழங்கவேண்டும் என்றே தான் வலியுறுத்துவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
I have nothing against work-life balance. In fact, I recommend it to all our competitors :)
— Aadit Palicha (@aadit_palicha) December 4, 2024
மேலும் அந்த வொர்க் லைப் பேலன்ஸ் பதிவு தன்னுடைய கருத்து இல்லை என்றும் கிரப்ட்டைல் சிஇஓ தக்ஷ் குப்தாவின் கருத்தையே தான் பதிவிட்டதாகவும் ஆதிக் தெரிவித்துள்ளார்.