என் மலர்
இந்தியா

குடும்பத்தினரை கொன்று புதைத்த சிறுவன்- திரிபுராவில் நடந்த கொடூரம்
- வீட்டிற்கு வெளியே இருந்த குழியை சந்தேகத்தின்பேரில் தோண்டியபோது உடல்கள் கிடைத்தன
- சிறுவனை கைது செய்து விசாரித்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அகர்தலா:
திரிபுராவின் தலாய் மாவட்டம், கமல்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட துரை ஷிப் பாரி கிராமத்தில் ஒரு வீட்டிற்கு வெளியே இருந்த குழியில் உடல் ஒன்று கிடந்து உள்ளது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் சம்பவ பகுதிக்கு சென்று உடலை கைப்பற்றினர்.
மேலும், வீட்டிற்கு வெளியே இருந்த குழியை சந்தேகத்தின்பேரில் தோண்டியபோது 3 உடல்கள் கிடைத்து உள்ளன. மொத்தமுள்ள 4 உடல்களில் 3 பேர் பெண்கள், ஒருவர் ஆண். அவர்கள் அனைவரும் ஒரே குடும்ப உறுப்பினர்கள்.
இதுபற்றி கமல்பூர் காவல் அதிகாரி ரமேஷ் யாதவ் கூறும்போது, 'இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தியதில் அதே குடும்பத்தில் உள்ள 15 வயது சிறுவன் படுகொலைகளை செய்த விவரம் தெரிய வந்துள்ளது. சிறுவனை கைது செய்து விசாரித்து வருகிறோம்' என்றார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பாதல் தேப்நாத் (வயது 70), சுமிதா தேப்நாத் (வயது 32), சுபர்னா தேப்நாத் (வயது 10) மற்றும் ரேகா தேப் (வயது 42) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். படுகொலைக்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.